Legal

பயன்பாட்டு விதிமுறைகள்

கடைசி புதுப்பிப்பு: ஜூலை 2026

சேவை பற்றி

நல்லநேரம் (Appspire Labs Private Limited தயாரிப்பு) ஜோதிடக் கணக்குகளையும் பலன்களையும் வழங்கும் app மற்றும் website. இதை பயன்படுத்தும்போது இந்த விதிமுறைகளுக்கு சம்மதிக்கிறீங்க.

வழிகாட்டுதல்தான்; உத்தரவாதம் இல்ல

ஜோதிடப் பலன்கள் வழிகாட்டுதல் நோக்கத்துக்கானவை. வாழ்க்கை முடிவுகள் உங்களுடையவை; எங்க பலன்களால் ஏற்படும் முடிவுகளுக்கு நாங்க பொறுப்பாக முடியாது. மருத்துவம், சட்டம், நிதி விஷயங்கள்ல அந்தந்த நிபுணர்களை அணுகுங்க. நாங்க விதியை கட்டுப்படுத்தல; நேரத்தை கணக்கிடுறோம்.

கணக்கு & பயன்பாடு

சரியான பிறப்பு விவரம் கொடுக்கிறது உங்க பொறுப்பு — தவறான விவரத்துக்கு தவறான கணக்குதான் வரும். கணக்கை துஷ்பிரயோகம் செய்தா (மோசடி, ஆட்டோமேஷன், பிறர் தகவலை அனுமதியில்லாம பயன்படுத்துறது) சேவையை நிறுத்த உரிமை உண்டு.

விலை மற்றும் கட்டணம்

நல்லநேரம் பயன்படுத்தும் அளவுக்கு மட்டும் கட்டணம். உங்கள் முதல் கேள்விக்கு இலவசமாக பதில் கிடைக்கும். அதன் பிறகு ஒரு சிறிய கிரெடிட் தொகுப்பை வாங்கலாம்; இது சந்தா அல்ல, எதுவும் தானாகப் புதுப்பிக்கப்படாது, கிரெடிட் காலாவதியும் ஆகாது.

இந்த தளத்திலும் செயலியிலும் உள்ள அனைத்து விலைகளும் இந்திய ரூபாயில் (INR) குறிப்பிடப்பட்டு வசூலிக்கப்படுகின்றன; GST உள்ளடங்கிய விலை. காட்டப்படும் விலைதான் வசூலிக்கப்படும் — கூடுதல் கட்டணம் எதுவும் இல்லை.

கட்டணங்கள் எங்கள் பேமெண்ட் கேட்வே மூலம் செயலாக்கப்படுகின்றன. உங்கள் கார்டு, UPI அல்லது வங்கி விவரங்களை நாங்கள் சேமிப்பதில்லை.

விலை மாற்றம் ஏற்கனவே வாங்கிய கிரெடிட்டுகளை பாதிக்காது. ஏதேனும் காரணத்தால் கிரெடிட் பணமாகத் திரும்பச் செலுத்தப்பட்டால், நீங்கள் அப்போது செலுத்திய விலையிலேயே திரும்பும் — இன்றைய விலையில் அல்ல. இலவசமாகக் கிடைத்த கிரெடிட்டுகளுக்கு திரும்பச் செலுத்த எந்தத் தொகையும் இல்லை.

அறிக்கைகளும் பொருத்த அறிக்கைகளும் இன்னும் விற்பனைக்கு வரவில்லை. அவை திறக்கும்போது, வாங்குவதற்கு முன்பே அவற்றின் விலைகள் இங்கும் முகப்புப் பக்கத்திலும் வெளியிடப்படும்.

கேள்விகள்INR
தொகுப்புவிலை (INR)ஒரு கேள்விக்கு (INR)
3 கேள்வி₹29₹9.67
10 கேள்வி₹49₹4.90
20 கேள்வி₹99₹4.95
30 கேள்வி₹149₹4.97
5 கேள்வி₹25₹5.00

அறிவுசார் சொத்து

App, உள்ளடக்கம், brand எல்லாம் Appspire Labs-க்கு சொந்தம். உங்க தனிப்பட்ட பயன்பாட்டுக்கு பயன்படுத்தலாம்; மறுவிற்பனை கூடாது.

சட்ட வரம்பு

இந்த விதிமுறைகள் இந்தியச் சட்டப்படி. சர்ச்சைகள் இந்திய நீதிமன்ற வரம்புக்கு உட்பட்டவை. கேள்விகளுக்கு: [email protected]